முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கியவருக்கு 3 ஆண்டு ஜெயில்

சேலம் கோர்ட்டில் தீர்ப்பு

Update: 2025-01-11 03:37 GMT
சேலம் சுக்கம்பட்டியை சேர்ந்த தொழிலாளி தங்கராஜ். அதே பகுதியை சேர்ந்தவர்கள் தங்கையா ஜெயக்குமார், ராபர்ட் சுந்தர்ராஜன் (52). வில்லியம் மோசஸ். இவர்களுக்குள் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதி தகராறு ஏற்பட்டது. இதில் 4 பேரும் சேர்ந்து தங்கராஜை தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி ராபர்ட் சுந்தர்ராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார். வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த போது தங்கையா, ஜெயக்குமார் இறந்தவிட்டனர். வில்லியம் மோசஸ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Similar News