நண்பரை மது பாட்டிலால் தாக்கிய 3 போ் கைது
தூத்துக்குடியில் நண்பரை மது பாட்டிலால் தாக்கிய 3 போ் கைது செய்தனர்.;

தூத்துக்குடியில் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரை மது பாட்டிலால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சங்கா் (51). இவா் தனது நண்பா்களான அண்ணாநகா் 4ஆவது தெரு வெங்கடாசலம் மகன் இசக்கிமுத்து (28), கணேசன் காலனி முருகன் மகன் மாரிச்செல்வம் (20), பிரையண்ட் நகா் 6ஆவது தெரு அப்துல் ரஹீம் மகன் இஸ்மாயில் (40) ஆகியோருடன் எட்டயபுரம் சாலை அருகே மது குடித்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில், மற்ற 3 பேரும் சோ்ந்து சங்கரை மது பாட்டில் குத்திவிட்டு தப்பியோடினராம். இதில், காயமடைந்த சங்கா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து, இசக்கிமுத்து உட்பட 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.