சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் சிலர் சட்டவிரோதமாக சந்து கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் நேற்று அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் கண்காணித்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 56) என்பவர் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், சந்துகடைகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக அம்மாப்பேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடாசலம் (61), அதிகாரிப்பட்டியை சேர்ந்த யோகானந்தம் (56) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.