வத்தலகுண்டுல் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பட்டாகத்தியுடன் வீடியோ பதிவு செய்த 3 வாலிபர்கள் கைது
Dindigul;
திண்டுக்கல், வத்தலகுண்டுவில் சமூக வலைதளம் (இன்ஸ்டாகிராம்)-ல் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் பட்டாகத்தியுடன் 3 வாலிபர்கள் வீடியோ வெளியிட்டனர். இது குறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில் எஸ்பி. தனிப்படையினர் மற்றும் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம், சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு பழைய வத்தலகுண்டு சென்றாய பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் பதுங்கி இருந்த விஜயகுமார்(23), சந்தனகுமார்(20), துரைஅரசு(19) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 பட்டாகத்திகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.