கிருஷ்ணராயபுரம் அருகே ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி வழங்கினார்;

Update: 2026-01-09 06:57 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.3 ஆயிரம் பணம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை எம்எல்ஏ சிவகாமசுந்தரி, வழங்கினார்.நிகழ்ச்சியில் கூட்டு றவு சங்க தணிக்கையாளர் சங்கர், பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ்,பேரூராட்சி தலைவர் சௌந்தரப்பிரியா துணைத் தலைவர் வேலுச்சாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் சரண்யா, பேரூராட்சி கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் கிருஷ்ணராயபுரம் அருகே பிச்சம்பட்டி, முனையனூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு எம் எல்ஏ சிவகாமசுந்தரி பொங்கல் தொகுப்பு வழங்கினார், இதில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவி ராஜா, கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக செயலாளர் சசிகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News