இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நியமனம்.
காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவராக BRN.ராஜாராம் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்;
இராமநாதபுரம் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டிக்கு பல வருடங்களாக மாவட்ட தலைவர் பதவி அறிவிக்காமல் இருந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையால் இராமநாதபுரம் மாவட்டத் தலைவராக BRN.ராஜாராம் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார், இதனால் கட்சி நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர், மாவட்டத் தலைவராக பொறுப்பேற்ற ராஜாராம் பாண்டியனுக்கு கட்சிப் பிரதிநிதிகள் தொழிலாளர்கள் ஆலய பூஜகர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இவர் இராமநாதபுரம் மாவட்ட பொருளாளர், மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்டுவந்தார், தற்போது இராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின்பு தற்போது புதிய மாவட்ட தலைவர் அறிவிக்கப்பட்ட உள்ளார் இவருக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்