திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பஸ் டிரைவரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
Dindigul;
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் - பழனி செல்லும் தனியார் பேருந்து நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த திருப்பத்தூரை சேர்ந்த வெங்கடேஷ்(34), பிரசாந்த்(33), முத்துப்பாண்டி(34) ஆகிய 3 பேர் பழனி செல்வதற்காக பஸ்ஸில் ஏற முயன்றனர். அப்போது பஸ் டிரைவர் பேகம்பூர், அசனாத்புரத்தை சேர்ந்த பஷீர்அகமது(29) பஸ் டிப்போ செல்வதாக கூறினார் அப்போது தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் 3 பேரும் சேர்ந்து டிரைவர் பஷீர்அகமதுவை சரமாரியாக தாக்கினர். இதில் டிரைவர் பலத்த காயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட வெங்கடேஷ், பிரசாந்த், முத்துப்பாண்டி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்