நாகையில் 3 தொகுதிகளில் 57,338 வாக்காளர்கள் நீக்கம்; வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்!!

நாகையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டார்.;

Update: 2025-12-19 14:40 GMT

தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 14-ம் தேதி வரை வீடு, வீடாக சென்று வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் குறித்தான வரைவு வாக்காளர்கள் பட்டியலை அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டனர். நாகை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் குறித்தான வரைவு வாக்காளர் பட்டியலை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தற்போது ஆட்சியர் ஆகாஷ் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டார். நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் 567730 வாக்காளர்கள் இருந்த நிலையில் 57338 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கண்டறிய இயலாதவர்கள், நிரந்தர குடி பெயர்ந்தவர்கள், இறந்த நபர்கள் என 10.09 சதவீத வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் கண்டறிய இயலாதவர்கள் என 13029 நபர்கள், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் 22873 நபர்கள், இறந்தவர்கள் 18133 நபர்கள், இரட்டை பதிவு உடையவர்கள் 3248 நபர்கள், இதர இனங்கள் 55 நபர்கள் என மொத்தம் 57338 நபர்கள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News