கரூரில் 3 கோடியே 60 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூரில் 3 கோடியே 60 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூரில் 3 கோடியே 60 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய குளத்துப்பாளையம் கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட் டும்பணி, மாநகராட்சி துவக்க பள்ளியில் கழிப்பிடம் அமைக்கும் பணி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டிடத்தை மராமத்து செய்யும் பணி மற்றும் சமையல் அறை புதியதாக அமைக்கும் பணி, ஜெயபிரகாஷ் பள்ளியில் சுற்றுச்சுவர், கழிப்பிடம் மற்றும் ஃபேவர் பிளாக் அமைக்கும் பணி, பசுபதிபாளையம் நடுநிலை பள்ளியில் பள்ளி கட்டிடம் மராமத்து பணி செய்தல் மற்றும் புதிய கழிப்பிடம் கட்டுதல், புலியூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் மாநிலவரி அலுவலர் அலுவலகம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூபாய் 3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்று, அடிக்கல் நாட்டி, அதற்கான பணிகளை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள், மாணிக்கம், இளங்கோ, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் சுதா, உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பொன்னாடைகள் அணிவித்தும், மலர் மாலைகள் அணிவித்தும் மரியாதை செய்தனர்.