ஆம்பூர் அருகே 30 ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமர்சையாக நடைப்பெற்ற சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ஆம்பூர் அருகே 30 ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமர்சையாக நடைப்பெற்ற சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா;

Update: 2025-07-07 10:17 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 30 ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமர்சையாக நடைப்பெற்ற சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த கோவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த பிறகு, இன்று 30 ஆண்டுகளுக்கு சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது, முன்னதாக கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, வேள்வி பூஜை, கணபதி பூஜை, உள்ளிட்ட சிறப்பு பூஜை செய்யப்பட்டு,மேளதாளங்கள் முழங்க புனித நீர், கோவிலை சுற்றிகொண்டு வரப்பட்டு, கோவில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Similar News