சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி பூத உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மாரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி உடல்நல குறைவால் காலமானதைத் தொடர்ந்து, அன்னாரின் பூத உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மாரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.;

Update: 2025-10-24 12:47 GMT
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி உடல்நல குறைவால் காலமானதைத் தொடர்ந்து, அன்னாரின் உடல் கொல்லிமலையில் அரசு மாரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி அவர்கள் மறைவெய்தியதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டார்கள். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி (வயது 74) உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் , மேயர் து.கலாநிதி மற்றும் துணை மேயர் செ.பூபதி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி அவர்களது உடல் சேந்தமங்கலம் வட்டம், நடுக்கோம்பை ஊராட்சி, புளியங்காடு கிராமத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அன்னாரது உடலுக்கு மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் , மாவட்ட ஆட்சியர் , மேயர் து.கலாநிதி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். மேலும், மாவட்ட ஆட்சியர் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் குடும்பத்தாருக்கு கண்ணீருடன் ஆறுதல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்னாரது பூத உடல் வைக்கப்பட்ட அவரது இல்லத்திற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி, அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் , போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் , பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , சேலம் நாடளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி , பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில் பாலாஜி அவர்கள் (கரூர்), பெ.ராமலிங்கம் (நாமக்கல்), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேயர் .து.கலாநிதி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து, மறைந்த சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி அவர்களின் இறுதி சடங்கு கொல்லிமலையில் உள்ள அன்னாரது தோட்டத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. மேலும், காவல்துறையினர் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அன்னாரின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி , பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), பெ.ராமலிங்கம் (நாமக்கல்) மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News