கலவை அருகே ரூ.32.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு புதிய அங்கன்வாடி மையத்தை ஒன்றிய குழு தலைவர் திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பாலி கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் மற்றும் கோடாலி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்;

Update: 2026-01-07 08:42 GMT
கலவை அருகே ரூ.32.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு புதிய அங்கன்வாடி மையத்தை ஒன்றிய குழு தலைவர் திறந்து வைத்தார். ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பாலி கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் மற்றும் கோடாலி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக் திறந்து வைத்து குழந்தைகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர்கள் அமரேசன், சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் குமாரி கலைமணி, லதா வெங்கடேசன், திமிரி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலி மூர்த்தி, கிளை செயலாளர்கள் எதிராஜ், கார்திகேயன், முனிரத்தினம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Similar News