தரகம்பட்டி, குருணிகுளத்துப்பட்டி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 350 விலையில்லா சைக்கிள் வழங்கல்
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி வழங்கினார்;
கரூர் மாவட்டம், கடவூர் மேற்கு ஒன்றிய பகுதிகளில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா முன்னாள் சேர்மன் செல்வராஜ் ஏற்பாட்டில் தனித்தனியே நடந்தது. தரகம்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார். கடவூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாம சுந்தரி கலந்து கொண்டு 79 மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதே போல் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன் தலைமை வகித்தார். கடவூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரபாசுரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாம சுந்தரி கலந்து கொண்டு 136 மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். மேலும் குருணிகுளத் துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பெரியகருப்பன் தலைமையில் நடந்த விழா விற்கு, கடவூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், பொருளாளர் ஆரீப்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கலந்து கொண்டு 135 மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் தெற்கு ஒன்றிய பொன்னுச்சாமி, ஆனந்த், வேல்முருகன், போன்டாராஜா, பழனியப்பன், அபு, ஜோதிவேல், மணிகண்டன், செந்தமிழ்,சம்பத்குமார், பாலு,நாகராஜ், சாதிக்பாட்ஷா. ராஜாசெரிப், அஸ்கர் அலி, ஆகிப்சலாம். சின்னச்சாமி உள்பட பெற்றோர் ஆசிரியர் கழக கழக நிர்வாகிகள்,உள்பட ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்