நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சேர்ந்த மாணவ, மாணவிகள் 37 வது சப் ஜூனியர் தேசிய அளவிலான வளையப்பந்து போட்டியில் சாதனை..

கேரளா மாநில வளையப்பந்து கழகம் மற்றும் இந்திய வளையப்பந்து கூட்டமைப்பு இணைந்து நடத்திய 37வது சப் ஜூனியர் தேசிய வளையப்பந்து போட்டிகள் - 2025 கேரளா மாநிலம் காசர்கோடு பையனூரில் உள்ள திருக்கரிப்பூர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 22/12/2025 (திங்கட்கிழமை) முதல் 26/12/2025 (வெள்ளிக்கிழமை) வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் நடைபெட்றது.;

Update: 2025-12-27 13:25 GMT

இப்போட்டிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 400 மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் 16 க்கு மேற்பட்ட அணிகளாக கலந்து கொண்டனர்.இப்போட்டிகள் குழு போட்டியாகவும், தனிநபர் ஒற்றையர், தனிநபர் இரட்டையர் மற்றும் தனிநபர் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் அணியின் சார்பாக நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தைச் சேர்ந்த G.மைக்கேல் ஜெபஸ்டின் மற்றும்மாணவிகள் பிரிவில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தைச் சேர்ந்த V.A.கிருஷிதா, G.காவியா ஆகியோரும் கலந்து கொண்னர்.  இதில் G.மைக்கேலஜெபஸ்டின் குழு போட்டியில் தங்கப் பதக்கமும், தனிநபர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.V.A.கிருஷிதா குழு போட்டியில் வெள்ளிப்பதக்கமும், தனிநபர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.G.காவியா குழு போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு நாமக்கல் மாவட்ட வளையப்பந்து கழகத்தினுடைய தலைவர்  R.அல்போன்ஸ் செயலாளர்  G.விஸ்வநாதன் பொருளாளர் T.பானுமதி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Similar News