கரூரில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 38வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் புகழஞ்சலி.
கரூரில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 38வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் புகழஞ்சலி.;
கரூரில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 38வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் புகழஞ்சலி. அதிமுக கட்சியின் நிறுவன தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம் ஜி ஆர் அவர்களின் 38வது நினைவு நாளில் தமிழக முழுவதும் உள்ள அதிமுகவினர் மற்றும் எம் ஜி ஆர் ரசிகர்கள் இன்று அவரது திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் முழு திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அதன் அருகாமையிலேயே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலை மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அவை தலைவர் திரு வி க, மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன்,எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஸ் என்கிற முத்துக்குமார், நகர செயலாளர் நெடுஞ்செழியன், மகளிர் அணியினர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த தங்களது தலைவருக்கு இதய அஞ்சலியை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கரூர் மனோரா கார்னர் அருகே அமைக்கப்பட்ட அலங்கார மேடையில் பொருத்தப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கும் மலர் மாலை அணிவித்து தங்களது இதய அஞ்சலியை செலுத்தினர்.