கிருஷ்ணராயபுரத்தில் 392 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி தொகைக்கான ஆணை வழங்கல்
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி வழங்கினார்;
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நலஉதவி திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் 151 பயனாளர்களுக்கும், குளித்தலை தாலுகாவில் 150 பயனாளர்களுக்கும்,கடவூர் தாலுகாவில் 91 பயனாளர்களுக்கும் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித் தொகை, முதிர்கன்னிகள் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் தொகை எனமொத்தம் 392 நபர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகைக்கான ஆணைகளை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி வழங்கினார் நிகழ்ச்சிக்கு குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலைமை வகித்தார். தாசில்தார் விஜயா, இந்துமதி, ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் வித்யாவதி, வெங்கடேசன், குணசேகரன்,துணை தாசில்தார்கள் சரண்யா, நீதிராஜன், மாலதி, உதயகுமார், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவி ராஜா, பேரூர் கழக செயலாளர்கள் சசிகுமார், மோகன்ராஜ், வருவாய் ஆய்வாளர்கள், விஏஓக்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.