குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா;
செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் பாம்பு கோவில் சந்தையிலிருந்து வருகை தந்து செங்கோட்டை நூலகத்தில் நடைபெற்ற இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளி செந்தில் முருகன் அரசு தேர்வில் வெற்றி பெற்றார் . அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது .இவர் நூலக துறையில் இளநிலை உதவியாளராக பணி ஆணை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டு விழாவில் போட்டித் தேர்வு மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள் .முடிவில் நூலகர் நாகராஜ் நன்றி தெரிவித்தார்.