கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்ககோரி மோகனூரில் விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி 2021 ம் ஆண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியின்படி கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 4,000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டும்,;

Update: 2026-01-10 14:00 GMT

 கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாகியும் திமுக அரசு இன்னும் அந்த அறிவிப்புக்கு அரசானை வெளியிடப்படவில்லை.அறிவித்த அறிவிப்பை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நுழைவு வாயில் முன்பு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் விவசாயிகள் கையில் கரும்பினை பிடித்து கொண்டு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்ககோரி கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News