கரூரில், கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி கவிழ்ந்து நகர பகுதி நாற்றம். 4 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு.

கரூரில், கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி கவிழ்ந்து நகர பகுதி நாற்றம். 4 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு. இந்த;

Update: 2026-01-19 07:07 GMT
கரூரில், கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி கவிழ்ந்து நகர பகுதி நாற்றம். 4 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு. கோவை மாநகராட்சிக்கு சொந்தமான லாரியில் அங்கு சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை ஏற்றிக்கொண்டு அரியலூர் மாவட்டம் டால்மியா சிமெண்ட் நிறுவனத்தை நோக்கி சென்ற லாரி கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே வந்த போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் லாரியில் ஏற்றி வந்த குப்பைகள் அனைத்தும் கரூர் மாநகர பகுதியில் சாலையில் சிதறி துர்நாற்றம் வீசியது. நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து இன்று பெரும்பாலானூர் பணிக்கு திரும்பும் வேலையில் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் போக்குவரத்து அதிகம் இன்று இருந்தது. இந்த நிலையில் இந்த விபத்தினால் மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதோடு சிதறிய குப்பைகளால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. சுமார் 4 மணி நேரமாக லாரியையும் குப்பைகளையும் அகற்றப்படாததால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பாதிப்படைந்தனர். இதனால் போக்குவரத்து காவலர்கள் அந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்தி விட்டு மற்றொரு சாலை வழியாக வாகனங்களை அனுமதித்தனர். இதனால் வாகனங்கள் வரிசை கட்டி அணிவகுத்து சென்றது. இதனால் மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அறிந்த கரூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பொக்லின் இயந்திரத்துடன் வந்து குப்பைகளை அள்ளி கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களில் ஏற்றிச்சென்று அந்த இடத்தை தூய்மைப்படுத்தினர்.

Similar News