பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 லைன் பாய்ஸ் இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 லைன் பாய்ஸ் இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி...;

Update: 2026-01-26 16:42 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 லைன் பாய்ஸ் சார்பாக இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி ராசிபுரம் எஸ் ஆர் வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு அணி பிரிவினர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இந்த கிரிக்கெட் போட்டியில் ஐந்து ஓவரில் சிறப்பாக விளையாடி அதிக ரன் எடுத்த அணி வீரர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் நாற்பதாயிரம், இரண்டாம் பரிசு முப்பதாயிரம், மூன்றாம் பரிசு 20 ஆயிரம் ,நான்காம் பரிசு பத்தாயிரம் என பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் அதிக ரன் எடுத்து பைவ் ஸ்டார் கிரிக்கெட் அணியினர் முதல் பரிசை பெற்றனர். இந்தப் போட்டியை கட்டனாச்சம்பட்டி முன்னாள் கவுன்சிலர் ரவி, தொடங்கி வைத்தார். இந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சிறப்பு விருந்தினர் ராசிபுரம் மக்கள் நலக்குழு தலைவர், நகர வளர்ச்சி மன்ற தலைவர் ,முன்னாள் கவுன்சிலர் வி. பாலு, அவர்கள், மற்றும் கலைஞர் தமிழ் பேரவை மாநில செயலாளர் தவசி நந்தகுமார், மற்றும் கே. மோகன் குமார், எம்‌.டி. பழனியப்பன், கே. வேதகரிஸ்வரன், டி.மார்ட்டின், புதுப்பட்டி பேரூர் 6.வது வார்டு செயலாளர்ஜி. கௌதம் ராஜ், எஸ். ஜீவராஜ், கார்த்திக் மாதேஸ்வரன், சதீஷ் சுப்பிரமணி,விடுதலை சிறுத்தைகள் கட்சி கேசவன், வி.கெளரி சங்கர், ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். மேலும் இதே போல் சிறந்த மட்டையாளர்களுக்கான பரிசு, சிறந்த பந்துவீச்சாளருக்கான பரிசு, சிறந்த விக்கெட் கீப்பருக்கான பரிசு, சிறந்த பந்து தடுப்பாளருக்கான பரிசு, மேலும் அனைத்து போட்டிகளுக்கான ஆட்டநாயகன் விருது, சிறந்த கேப்டனுக்கான கோப்பை உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அணியினருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் ராசிபுரம் மக்கள் நல குழு தலைவர் நகர வளர்ச்சி மன்ற தலைவர் முன்னாள் கவுன்சிலர் வி.பாலு அவர்கள் சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி அனைவரையும் பாராட்டினார். மேலும் விழா குழுவின் சார்பில் இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை சிறப்பாக நடத்தி மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு விழா குழுவினர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்த கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் பல்வேறு அணி வீரர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், பார்வையாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News