திண்டுக்கல்லில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது - 12 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல்

Dindigul;

Update: 2025-12-31 04:33 GMT
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் எஸ்.பி. தனிபடையினர் GTN-சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கஞ்சா கடத்தி வருவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த குஜிலியம்பாறையை சேர்ந்த கருப்பசாமி(29), பார்த்திபன்(25), நிலக்கோட்டையை சேர்ந்த முத்துப்பாண்டி(43), தாடிக்கொம்பு உண்டார்பட்டியை சேர்ந்த நல்லதம்பி(21) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா, ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News