திருச்செங்கோடு நகராட்சி 4வது வார்டு எட்டிமடை பகுதியில் 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா திருச் செங்கோடு எம் எல்ல ஈஸ்வரன் திறந்து வைத்தார்

திருச்செங்கோடு நகராட்சி 4வது த்தி வார்டு எட்டிமடை பகுதியில் 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா திருச்செங்கோடு எம் எல் ஏ ஈஸ்வரன்நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்;

Update: 2026-01-14 13:18 GMT
திருச்செங்கோடு நகராட்சி நாலாவது வார்டு எட்டிமடைபகுதியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் எதிரில் 4 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ் தனது சொந்த செலவில் உருவாக்கியுள்ள கலையரங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது.அந்தப் பகுதியில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் பந்தல் மேடை அமைக்க செலவாவதை கருத்தில் கொண்டு நிரந்தர கலையரங்கம் ஒன்று இருந்தால் அந்த செலவுகளை தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் இந்த கலையரங்கம் உருவாக்கப் பட்டதாக கூறப்படும் நிலையில்இந்த கலையரங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்திதிருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு கலையரங்கை திறந்து வைத்தனர்.

Similar News