நாமக்கல்லில் விஜய் பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 4 பேர் படுகாயம்.-மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்து K.R.N.இராஜேஸ்குமார் MP ஆறுதல்!
கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி., நாமக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சந்தோஷ், எழிலரசி, மனோஜ்குமார், ஆறுமுகம் ஆகிய 4 பேருக்கும் முதலமைச்சர் நிவாரண நிதி உதவிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.;
தவெக தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர், 2-ம் கட்டமாக நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அந்த வரிசையில் 3-வது கட்ட பிரசாரத்தை கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் -27)நாமக்கல்லில் தொடங்கினார்.நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.தியேட்டர் அருகே மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பெண்கள் உட்பட 33 பேர் மயக்கமடைந்தனர் அவர்களை மீட்டு நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் கூட்ட நெரிசலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் சந்தோஷ், எழிலரசி, மனோஜ்குமார், ஆறுமுகம் ஆகிய 4 பேரும் தவிர மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இந்த நிலையில் சந்தோஷ், எழிலரசி, மனோஜ்குமார், ஆறுமுகம் ஆகிய 4 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர்.என் ராஜேஷ்குமார் எம்பி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்க்கமூர்த்தியை சந்தித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சந்தோஷ், எழிலரசி, மனோஜ்குமார், ஆறுமுகம் ஆகிய 4 பேருக்கும் முதலமைச்சர் நிவாரண நிதி உதவிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.*இந்த நிகழ்வில் நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் செ.பூபதி, ஒன்றிய கழக செயலாளர் எம்பி.கௌதம், சார்பு அணி அமைப்பாளர்கள் பொன்.சித்தார்த் , கிருபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.