கரூர் திருக்குறள் பேரவை சார்பில் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு திருவள்ளுவர் முழு திருஉருவ சிலையுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருக்குறளை பாடி ஊர்வலமாக சென்றனர்.

கரூர் திருக்குறள் பேரவை சார்பில் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு திருவள்ளுவர் முழு திருஉருவ சிலையுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருக்குறளை பாடி ஊர்வலமாக சென்றனர்.;

Update: 2026-01-25 09:38 GMT
கரூர் திருக்குறள் பேரவை சார்பில் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு திருவள்ளுவர் முழு திருஉருவ சிலையுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருக்குறளை பாடி ஊர்வலமாக சென்றனர். கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு திருக்குறள் பேரவை 40 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் தலைமையில் திருவள்ளுவர் சிலையுடன் ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்வில் திருக்குறள் பேரவையின் முக்கிய நிர்வாகிகள் தமிழறிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் மாணவ மாணவியர் என ஏராளமான கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் பேருந்து நிலையம் ரவுண்டானா, திண்ப்பா கார்னர் வழியாக தனியார் திருமண மண்டபத்தில் உள்ள கூட்டரங்கில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும், வள்ளுவமே வாழ்வியல்,இல்லாது பொல்லாதது சொல்லாது வள்ளுவத்தில் இல்லை, குறள் கற்போம் குறள்வழி வாழ்வோம்,அறம் பொருள் இன்பம் முப்பால் கற்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு திருக்குறளை பாடி திருக்குறளின் மகிமையை மக்களுக்கு விளக்கிச் சென்றனர்.

Similar News