நாமக்கல்: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் தலைமையில் 4000க்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு!

எடப்பாடியாரை புதன்சந்தை பகுதியில் கழக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஸ்ரீதேவி மோகன்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மின்னாம்பள்ளி நடேசன், புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் சுமார் 4000க்கும் மேற்பட்டோர் வரவேற்பு அளித்தனர்.;

Update: 2025-10-11 16:06 GMT
நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் 8 மற்றும் 9 புதன்கிழமை / வியாழக்கிழமை மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்,நாமக்கல் சட்டமன்ற தொகுதி, புதுச்சத்திரம் பகுதியில் முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி முன்னிலையில்...கழக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் தலைமையில் சார்பாக சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை புரிந்த அதிமுக கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடியாரை புதன்சந்தை பகுதியில் கழக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஸ்ரீதேவி மோகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மின்னாம்பள்ளி நடேசன், புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் சுமார் 4000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோர் திரண்டு மேள தாளத்துடன் சிறப்பான உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

Similar News