கபிலர்மலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்.| king news 24x7
கபிலர்மலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.;
மருத்துவ முகாம்
பரமத்திவேலூர்,ஜன. 29: பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலையில்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற் றது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜானகி, கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பூவராகவன், வட்டார கல்வி அலுவலர் சுரேஸ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், குழந்தைகள்,எலும்பியல் உள்ளிட்ட டாக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசோதனை செய்து உதவி உபகரணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்க பரிந்துரை செய்தனர். மொத்தம் 80 - மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் புதிதாக தேசிய அடையாள அட்டை 14 பேருக்கும், பரிந்துரைக்கப்பட்ட உதவி உபகரணங்கள் 4 பேருக்கும், பஸ் பாஸ் மற்றும் ரெயில் எ பாஸ் 15 பேருக்கு பரிந்துரைக்கப்பட்டது.முகாமில் சிறப்பு பயிற்றுனர்கள் அருள்குமார், இயன் முறை டாக்டர் விஜயபி ரியா, பள்ளி ஆயத்த முகாம் ஆசிரியர் மகேஷ்வரி, உதவியாளர் பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.