தமிழகத்தின் தென் திருப்பதி என அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் ரூபாய் 5 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும்-கரூரில் செந்தில் பாலாஜி பேட்டி.
தமிழகத்தின் தென் திருப்பதி என அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் ரூபாய் 5 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும்-கரூரில் செந்தில் பாலாஜி பேட்டி.;
தமிழகத்தின் தென் திருப்பதி என அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் ரூபாய் 5 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும்-கரூரில் செந்தில் பாலாஜி பேட்டி. கரூர் அடுத்த தாந்தோணி மலை பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் தமிழகத்தின் தென் திருப்பதி என அழைக்கப்படும் அருள்மிகு கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் வருகிற ஜனவரி 28ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று கோவிலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் ரூபாய் ஐந்து கோடி மதிப்பீட்டில் அருள்மிகு வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் வரும் ஜனவரி 28ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணியிலான நேரத்தில் நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்காக கோவிலை புனரமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதில் தேர், கோவில் கோபுரத்தில் தங்க முலாம் பூசுதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்காக விழா கமிட்டி அமைக்கப்பட்டு ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கும்பாபிஷேக விழா அன்று கரூரில் உள்ள புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தாந்தோணி மலை பகுதியில் உள்ள கோவில் வரை பேருந்துகள் இலவசமாக இயக்கப்படும் எனவும், விழாவிற்கு அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது எனவும், விழாவில் அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ திருப்பணி குழு தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.