விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் திண்பண்டம் சாப்பிட்ட மாணவிகள் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி ஆய்வு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மகளிர் விடுதியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 61 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்,;

Update: 2026-01-20 12:33 GMT

இந்த நிலையில் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் விடுதி மாணவிகள் அஸ்வினி (14), வர்ணிகா (14), அக்ஸரா (15), தன்வி(12), துர்கா (14) ஆகிய 5 பேருக்கு திடீரென வாந்தி, தலைவலி ஏற்பட்டுள்ளது, இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிகளை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறையின் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விளையாட்டு விடுதியில் உள்ள உணவு கூடம், சமையல் கூடத்தில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மாணவிகள் நேற்று இரவு சிக்கன் உணவும், காலையில் கிச்சடி உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றது தெரியவந்துள்ளது.

Similar News