கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி கடன்,மாணவர்கள் இளைஞர்களுக்கிடையே போதை கலாச்சாரம்- இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் இடத்தில் கொண்டு வந்த சாதனை திமுகவையே சாரும் -MRV.

கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி கடன்,மாணவர்கள் இளைஞர்களுக்கிடையே போதை கலாச்சாரம்- இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் இடத்தில் கொண்டு வந்த சாதனை திமுகவையே சாரும் - கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு.;

Update: 2026-01-21 07:20 GMT
கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி கடன்,மாணவர்கள் இளைஞர்களுக்கிடையே போதை கலாச்சாரம்- இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் இடத்தில் கொண்டு வந்த சாதனை திமுகவையே சாரும் - கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு. கரூர் அடுத்த தான்தோன்றி மலையில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் 109 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்புரை ஆற்றிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் சாதனைகள் 10 லட்சம் கோடி கடன், போதை கலாச்சாரம் ஆகியவை இந்தியாவிலேயே முதல் இடத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இந்த இரண்டு சாதனைகளும் திமுகவையே சாரும் என்ற அவர் போதைக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிகமாக அடிமையாகி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கேள்விப்பட்ட திமுகவினருக்கு குளிர் காய்ச்சல் வந்து விட்டது. மகளிர்க்கு ரூ.2,000 , காங்கிரீட் முழுமையாக கட்டித் தரப்படும் என எடப்பாடியார் தெரிவித்துள்ளார். சொன்னதை செய்வது அம்மாவின் அரசு. சொல்லாததையும் செய்வதுதான் அண்ணா திமுக அரசு. ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும் இடம் இல்லாதவர்களுக்கு மூன்று சென்ட் நிலம் வாங்கி அவர்களுக்கும் காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும் பெண்கள் ஆண்கள் இருவருக்கும் நகரப் பேருந்தில் இலவசம். அம்மா ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றார்.

Similar News