கரூரில், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 500 க்கும் மேற்ப்பட்ட சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் கைது.

கரூரில், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 500 க்கும் மேற்ப்பட்ட சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் கைது.;

Update: 2026-01-20 11:18 GMT
கரூரில், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 500 க்கும் மேற்ப்பட்ட சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் கைது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கரூர் மாவட்டம் சார்பில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடனும், அகவிலைப்படியுடனும் கூடிய ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ஒட்டுமொத்த தொகையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் மற்றும் சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். மேலும், 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் சாலை மறியல் போரட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில . அடைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Similar News