திண்டுக்கல் அருகே பெயிண்டர் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து ரூ.5000 பணம், செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

Dindigul;

Update: 2025-12-25 15:23 GMT
திண்டுக்கல்லை சேர்ந்த பெயிண்டர் குமார் இவர் பெயிண்ட் வாங்குவதற்காக தோட்டனூத்து ஆரம்ப சுகாதார நிலைய அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த தோட்டனூத்து, மெட்டூர் காலனியை சேர்ந்த தங்கமணி(30), பகவான் ராமதாஸ் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி (எ) ஆல்பர்ட்(40) ஆகிய இருவரும் குமாரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த ரூ.5000 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றதாக அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Similar News