நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு நாள்!!

ராணிப்பேட்டை மாவட்டம்இந்நிகழ்ச்சிக்கு நெமிலி பேரூர் கழக செயலாளர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு வரவேற்றார்;

Update: 2026-02-03 09:53 GMT
நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு நாள்!! ராணிப்பேட்டை மாவட்டம் சுயமரியாதைச் சுடர், பேரறிஞர் அண்ணா அவர்களின் 57-வது நினைவு நாள், ஒன்றிய கழகச் செயலாளர் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நெமிலி பேரூர் கழக செயலாளர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு வரவேற்றார். பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி நெமிலி பஜார் வீதியில் அமைதி ஊர்வலமாகச் சென்று, நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து, பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின், திமு கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களை எழுப்பி அனைத்து நிர்வாகிகளும், கழகத்தினரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யவும், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்றெடுக்கவும் இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், நெமிலி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தமன், துணை செயலாளர்கள் முகம்மது அப்துல் ரகுமான், பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன், நெமிலி பேரூர் நிர்வாகிகள் சேகர், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News