நாட்றம்பள்ளியில் சட்டவிரோதமாக சூதாட்டம் விளையாடிய 6 பேர் கைது

நாட்றம்பள்ளியில் சட்டவிரோதமாக சூதாட்டம் விளையாடிய 6 பேர் கைது போலீஸார் அதிரடி நடவடிக்கை

Update: 2025-01-11 11:38 GMT
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது! இனோவா கார், இருசக்கர வாகனம் 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் எஸ்பி தனிபடை காவல்துறையினர் நடவடிக்கை திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஏரியூரில் கர்நாடகா, ஆந்திரா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து இப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற எஸ்பி தனிப்படை போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையினர் வருவதைக் கண்ட சூதாட்டம் நடத்துபவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சின்ன மோட்டூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ், அசோகன், சிவா பழனி மற்றும் ஆந்திர மல்லானூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம், ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்து இனோவா கார், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சூதாட்ட ஏஜென்ட் நடத்துபவர்கள் தப்பி ஓடிய நிலையில் எஸ்பி தனிப்படை காவல்துறையினர் இவர்களை நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Similar News