செயின் பறிப்பு வழக்கில் இரண்டு பேருக்கு 6ஆண்டு சிறை தண்டனை!
தூத்துக்குடியில் செயின் பறிப்பு வழக்கில் இரண்டு பேருக்கு 6ஆண்டு சிறை தண்டனை;
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற செயின் பறிப்பு வழக்கில் குற்றவாளிகள் ராபின்சன் (43/25), சுந்தர் (எ) சுந்தரமூர்த்தி (38/25) ஆகியோருக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்–3, தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹500 அபராதம் விதித்து இன்று (15.09.2025) தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ், திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன் மற்றும் விசாரணைக்கு உதவிய தலைமை காவலர் முருகனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.