ஒகேனக்கல்லில் சூதாடிய 6 பேர் கைது

ஒகேனக்கல்லில் தனியார் விடுதி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது;

Update: 2025-09-22 08:24 GMT
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் உதவி காவல் ஆய்வாளர் பரமேஸ்வரன் மற்றும் காவலர்கள், இன்று திங்கட்கிழமை காலை சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஒகேனக்கல் அருகே விடுதியையொட்டி, கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். காவலர்களை பார்த்ததும் தப்பி ஓட முயன்றவர்களை காவலர்கள் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சக்தி வேல், குமார், சிவராஜ், அங்குராஜ், பழனிசாமி, ரகு என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.5,000 பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News