ஜன. 6ம்தேதி முதல் நடைபெற உள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தம்
மாநிலசெயலாளர் குமரசேன் செயலறிக்கையையும், மாநில பொருளாளர் விஜயசாந்தி நிதி நிலை அறிக்கைகயையும் வாசித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக நிறுவன தலைவர் மாயவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.;
பெரம்பலூரில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநிலசெயலாளர் குமரசேன் செயலறிக்கையையும், மாநில பொருளாளர் விஜயசாந்தி நிதி நிலை அறிக்கைகயையும் வாசித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக நிறுவன தலைவர் மாயவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அறிவுத்துள்ள பழைய ஓய்வூதியம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 27ம்தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டையும், ஜன. 6ம்தேதி முதல் நடைபெற உள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தையும் வெற்றி பெற செய்திட வேண்டும். ஆசிரியர்கள் பணியில் நீடிக்கவும், பதவி உயர்வுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கும் பார்லிமெண்டில் ஆர்டிஇ சட்ட பிரிவு 23ல் திருத்தம் கொண்டு வர வேண்டும். கோர்ட் தீர்ப்பில் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியுள்ளதால் பணி நியமன முன்னுரிமை அடிப்படையில் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும். அகில இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த தீர்ப்புக்கு விதி திருத்தம் கோரியும் வரும் பிப்ரவரி 5ம் தேதி டெல்லியில் நடைபெறும் பேரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையம் நாகப்பட்டிணத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனவே, பெண் ஆசிரியர்கள் மிகுந்த மனச் சோர்வுக்கும், உடல் சோர்வுக்கும் உள்ளாவதால் வேதாரண்யத்தில், ஒரு மதிப்பீட்டு மையத்தை ஏப்ரல் 2026ல் துவங்கிட வேண்டும். 2004-2006 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் அனைவரையும் பணியேற்ற நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான காப்பீட்டு நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சைக்கான முழுத் தொகையும் வழங்கிட வேண்டும். கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இறுதி வரை அதாவது மே மாதம் வரை தொடர்ந்து பணி புரியலாம் என்ற விதிமுறையை பள்ளிக் கல்வித்துறை கடைபிடிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில தணிக்கையாளர் கணேஷ்ராஜா, மாவட்ட பொருளாளர் நந்தகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் அன்புச்செல்வன் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் அருண்குமார் நன்றி கூறினார்.