தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது;

Update: 2026-02-01 14:08 GMT
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், ஆன்லைனில் போலியான டெலிகிராம் ஐடி மற்றும் போலியான வெப்சைட் ஆகியவற்றை உருவாக்கி காயின் பிட்டிங் டாஸ்க் ( Old Coin Purchase Task) செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறி முதலீடு செய்ய வைத்து போலியாக வாலட்டில் பணம் வரவு வைக்கப்பட்டதாக ரூ.5,83,007 பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியது தொடர்பாக, தென்காசி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், எதிரிகள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G.S.மாதவன்T.P.S., அவர்களின் அறிவுறுத்தலின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜீலியஸ் சீசர் அவர்களின் தலைமையில், காவல் ஆய்வாளர் திருமதி.வசந்தி மற்றும் சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்று, மேற்படி குற்றங்களில் ஈடுபட்ட ஆறு எதிரிகள் கைது செய்து அவர்களிடமிருந்து 10 மொபைல் போன்கள், 33 சிம் கார்டுகள், 44 வங்கி கணக்கு விவரங்கள், 68 ஏடிஎம் கார்டுகள், 13 செக் புத்தகங்கள், 2 லேப்டாப்கள் மற்றும் 1 மெமரி கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் பொறியியல் பட்டதாரிகள் என்பதும் சிங்கப்பூரில் இதற்கு முன்பு பணியாற்றியிருப்பதாகவும், நாளிதழில் பணியாற்றி வருவதாகவும் குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் தாங்கள் பெற்ற பொறியியல் அறிவை சைபர் குற்றச் செயல்களில் தவறாக பயன்படுத்தலாம் என எண்ணி இந்த குற்றங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது எதிரிகள் Donepay, Showpay, Hoyopay and Havipay போன்ற App-களை பயன்படுத்தியும், எதிரிகள் பணியாற்றி வந்த சிம் கார்டு விற்பனை பணியின் மூலம் பழக்கமான நபர்களிடம் வங்கி கணக்குகளை திறந்து தருமாறு கூறியும், சிவகங்கை, பரமக்குடி, காளையார்கோவில் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள பல்வேறு நபர்களை பணம் தருவதாக கூறி ஏமாற்றி வங்கி கணக்குகளை பெற்றுக் கொண்டும், அந்த வங்கி கணக்குகளை சைபர் மோசடி குற்றங்களில் ஏமாற்றி பெறப்படும் பணத்தை பெற பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் எதிரிகள் இவ்வாறு செயல்பட்டால் தாங்கள் சிக்கமாட்டோம் என்ற தவறான எண்ணத்தில் அவர்கள் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. கைப்பற்றப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை ஆய்வு செய்ததில், எதிரிகளுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களிலும், இந்தியா முழுவதிலுள்ள பல மாநில சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களிலும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, எதிரிகள் மீது உரிய நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மாநில சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமிஷன் கிடைக்கும் என்ற ஆசையில் வங்கி கணக்கு விவரங்களை ஏஜென்ட்களிடம் வழங்கும் நபர்களும் குற்றவாளியாவார்கள். தங்களது வங்கி கணக்கு, ATM விவரங்கள் OTP, KYC போன்ற முக்கியமான விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும், ஆன்லைன் வேலை வாய்ப்புகள், இணையவழி பங்குச்சந்தை முதலீடுகள், இணையவழி கடன்கள், டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக ஏமாற்றும் நபர்கள், Scholarship பணம் தருவதாக ஏமாற்றும் நபர்கள், ஆன்லைனில் குறைந்த விலைக்கு பொருள்கள் தருவதாக தருவதாக ஏமாற்றும் நபர்கள், WhatsApp APK files (RTO Challan, SBI) தொடர்பாக மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு தென்காசி மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Similar News