அதியமான்கோட்டையில் 60 லட்சத்திற்கும் ஆடுகள் விற்பனை

அதியமான்கோட்டை செவ்வாய் வார சந்தையில் 60 லட்சத்திற்கும் ஆடுகள் விற்பனை;

Update: 2025-04-15 05:53 GMT
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட அதியமான் கோட்டையில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோயிலில் தற்போது ஆண்டு திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் மைதானத்தில் வார சந்தை நடைபெறும் தற்போது அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் நல்லமபள்ளியில் நடக்கும் வாரச்சந்தை இரு வாரங்களுக்கு அதியமான்கோட்டையில் நடைபெறும். ஏப்ரல் 15 இன்று கூடிய வார சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகள் 3000 ரூபாய்க்கு துவங்கி 25000 ரூபாய் வரை என இன்று ஒரே நாளில் சுமார் 60 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News