நெய்தலூர் காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில் 60 மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டை
வாசகர் வட்டம் சார்பில் 58வது நூலக வார விழா நிகழ்ச்சி;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில் 58வது நூலக வார விழா முன்னிட்டு ஊர் புற நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் 60 மாணவ மாணவியர்களுக்கு ஊர் புற நூலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டைகள் இன்று வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெரால்டு பெஞ்சமின், நூலகர் கண்ணதாசன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்