நாமக்கல் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு நெய் அபிஷேகம்!

டிசம்பர் -27 சனிக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜை விழாவில், பக்தர்கள் வழங்கிய நெய்யை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் கொண்டு வந்து கொடுத்த நெய்யைக் கொண்டு,உற்சவர் மற்றும் மூலவர் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2025-12-27 13:09 GMT
நாமக்கல் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் 60ம் ஆண்டு விழா டிசம்பர் 5ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது.நாமக்கல்-மோகனூர் ரோட்டில், பிரசித்திபெற்ற ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 60வது ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதன் தொடர்ச்சியாக டிசம்பர் -27 சனிக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜை விழாவில்,பக்தர்கள் வழங்கிய நெய்யை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த நெய் அபிஷேகம் விழாவில் பக்தர்கள் கொண்டு வந்து கொடுத்த நெய்யைக் கொண்டு, உற்சவர் மற்றும் மூலவர் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடைபெற்றது.மேலும் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டன. மண்டல பூஜை விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையில் ஐயப்ப சுவாமி பஜனை பாடல்களைப் பாடி வழிபாடு செய்தனர். மூலவர் ஸ்ரீ ஐயப்ப சுவாமி சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்த மண்டல பூஜை விழாவில், நாமக்கல் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் மற்றும் ஐயப்ப சுவாமி அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

Similar News