கரூர்-60 ஆண்டுகளாக பயன்படுத்திய பொது பாதையை ஆக்கிரமித்த தனியார் நிறுவனம்-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சியின் சார்பில் புகார் மனு.
கரூர்-60 ஆண்டுகளாக பயன்படுத்திய பொது பாதையை ஆக்கிரமித்த தனியார் நிறுவனம்-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சியின் சார்பில் புகார் மனு.;
கரூர்-60 ஆண்டுகளாக பயன்படுத்திய பொது பாதையை ஆக்கிரமித்த தனியார் நிறுவனம்-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சியின் சார்பில் புகார் மனு. தமிழர் தேசம் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வருபவர் அருள்ராஜ். இன்று தனது கட்சி நிர்வாகி உடன் மாவட்ட ஆட்சியர் வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா கள்ளை கிராமத்தில் உள்ள 209,248,249,250,251, 490,205 சர்வே எண்கள் வழியாக உள்ள பாதையை மணியகவுண்டம்பட்டி, தொட்டியபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வண்டிப்பாதையாக பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்தப் பகுதியில் சன்ப்ரோ ரினிவபிள் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை ஆக்கிரமிப்பு செய்து தடுப்பு சுவர் அமைத்துள்ளனர். மேலும் அறுபது ஆண்டுகளாக அந்தப் பாதையை பயன்படுத்தி வந்த பொது மக்களை அனுமதிக்க மறுக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பாதையை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.