கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி 69,900 மனுக்களும் பெறப்பட்டுள்ளது எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தகவல்.

நாமக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 238 முகாம்கள் நடத்தப்பட்டு 1,01,179 மனுக்களும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி 69,900 மனுக்களும் பெறப்பட்டுள்ளது.;

Update: 2025-10-10 14:47 GMT
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தகவல். நாமக்கல் மாவட்டம், தாளம்பாடி, பொம்மைகுட்டைமேடு கவின் மஹாலில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , மாவட்ட ஆட்சியர் தலைமையில், புதுச்சத்திரம் வட்டாரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 636 பயனாளிகளுக்கு ரூ.88.48 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் 15.07.2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்தார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 24 நகர்ப்புற மற்றும் 15 ஊரகப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. மொத்தம் - 238 முகாம்கள் நகர்ப்புறம் 110, கிராமப்புறம் -118) நடத்திட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரையும் (நகர்ப்புறம் -44, கிராமப்புறம் -58), 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14 வரையும் (நகர்ப்புறம் -36, கிராமப்புறம் -40), 3-ம் கட்டமாக செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 10 வரை 60 முகாம்கள் (நகர்ப்புறம் -30, கிராமப்புறம் -30) என 238 முகாம்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதில் பட்டியலிடப்பட்ட மனுக்கள், பட்டியலிடப்படாத மனுக்கள் என 1,01,179 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 69,900 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதுச்சத்திரத்தில் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, இன்றைய தினம் 636 பயனாளிகளுக்கு ரூ.88.48 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிர் விடியல் பயண திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000/- உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், 1முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை, கலைஞர் கனவு இல்லம் திட்டம், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை உயர்வு, தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, விவசாயிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு அரசின் உதவிகள், சேவைகள் அனைத்தும் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாக உள்ளது. அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, 50 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்றவர்கள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியில், செவிலியர் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் விடுதி, புத்தகம், உணவு ஆகியவற்றின் கட்டணத்தினை அரசே செலுத்துகிறது. எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர்‌ கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார். தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,05,000/-மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.27,720/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவியும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு சொத்து வரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், வருவாய்த்துறையின் சார்பில் 338 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பில் இ-பட்டா, நத்தம் பட்டா, பட்டா மாறுதல், சான்றுகளும், மின்சாரத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 87 பயனாளிகளுக்கு புதிய பதிவு அட்டை, 13 பயனாளிகளுக்கு ரூ.36,800/- மதிப்பில் கல்வி உதவித்தொகை, கூட்டுறவுத்துறையின் சார்பில் 46 பயானாளிகளுக்கு ரூ.52,79,100/- மதிப்பில் பயிர், கால்நடை பராமரிப்பு கடனுதவியும், வட்ட வழங்கல் துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, சுகாதாரத்துறையின் சார்பில் 25பயனாளிகளுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீடு அட்டைகள் என மொத்தம் 636 பயனாளிகளுக்கு ரூ.88,48,620/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், புதுசத்திரம் அட்மா குழு தலைவர் எம்.பி.கௌதம், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.கலைச்செல்வி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Similar News