மணப்பாறை அருகே எலியை துரத்திச்சென்று வீட்டினுள் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு. பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்புத்துறையினர்.
மணப்பாறை அருகே எலியை துரத்திச்சென்று வீட்டினுள் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு. பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்புத்துறையினர்.;
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள செவலூர், திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் வீட்டின் அருகே ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் அமைத்து அதில் பழைய பொருட்களை போட்டு வைத்திருந்தார். இன்று எலியை துரத்திக்கொண்டு வந்த சுமார் 7 அடி நீளம் கொண்ட மஞ்சள் சாரைப்பாம்பு ஒன்று ஆஸ்பெஸ்டாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளது. இதனைக் கண்ட கோபாலகிருஷ்ணன் இதுகுறித்து மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த பழைய பொருட்களை ஒவ்வொன்றாக அகற்றிய போது பாம்பு ஒரு சாக்கு பையின் உள்ளே இருப்பதைகண்டனர் பின்னர் பாம்பு பிடிக்கும் கருவியால் பாம்பை பத்திரமாக பிடித்து அதனை பிளாஸ்டிக் குழாயில் அடைத்து வனப்பகுதியில் விட்டனர்.