கரூரில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.
கரூரில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.;
கரூரில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழக முழுவதும் 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், மாவட்ட பொருளாளர் ராஜ்கமல் உள்ளிட்ட இருபால் கிராம நிர்வாக அலுவலர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் கழிப்பறை, குடிநீர், இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம் செய்யப்பட வேண்டும் எனவும், கிராம நிர்வாக அலுவலர்களின் டிஎன் பிஎஸ்சி நேரடி நியமன முறையில் கல்வி தகுதியை பட்டப் படிப்பு என மாற்றியமைக்க வேண்டும், பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ள நிலையில் பத்தாண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும்,20 ஆண்டு படி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும், டி எஸ் எல் ஆர் பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரை பெற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இதனால் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.