ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7அம்ச கோரிக்கை நிறைவேற்றக்கோரி கிராம நிர்வாக அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இராணிப்பேட்டை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நேற்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-12-31 09:36 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7அம்ச கோரிக்கை நிறைவேற்றக்கோரி கிராம நிர்வாக அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம். ராணிப்பேட்டை மாவட்டம் டி.31 இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இராணிப்பேட்டை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நேற்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர் மாவட்ட பொருளாளர் கீதா வரவேற்புரை ஆற்றினார். 7 அம்ச கோரிக்கையாக காத்திருப்பு போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நவீன மயமாக்கப்பட்ட கழிப்பிட வசதி கூடிய அலுவலக கட்டிடம் கட்டி தர வேண்டும் கிராம நிர்வாக அலுவலர்களின் TNPSC நேரடி நியமன முறையில் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக மாற்றி அமைக்க வேண்டும் தனி உயர்வு பத்தாண்டு முடிந்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும், 20 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும் அரசாணை வெளியிட வேண்டும் கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி உயர்வில் 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக மாற்ற வேண்டும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நிலையில் ஊதியமும் சிறப்புகளை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியமும் வழங்க வேண்டும் TSLR பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையை பெற வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த கோருதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது இந்த காத்திருப்பு போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சங்கரநாராயணன், அரக்கோணம் கோட்ட செயலாளர் நெடுஞ்செழியன், அரக்கோணம் , நெமிலி ,சோளிங்கர் ஆற்காடு ,கலவை வாலாஜா ஆகிய வட்ட தலைவர்கள் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சுமார் 180 மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்

Similar News