குஜிலியம்பாறையில் சேவல் சண்டையில் பறிமுதல் செய்யப்பட்ட 7 சேவல்கள் ஏலம்

திண்டுக்கல் குஜிலியம்பாறை;

Update: 2026-01-09 03:23 GMT
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே இலுப்பப்பட்டியில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை குஜிலியம்பாறை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,27,000 பணம், 62 டூவீலர்கள், 7 சேவல்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் 7 சேவல்களை பொது ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அன்னமயில் தலைமையில் 7 சேவல்களும் பொது ஏலம் விடப்பட்டது. இதில் 7 சேவல்களும் ரூ.33.700 ஏலம் போனது. இதில் ஒரு சேவல் மட்டும் ரூ.11.200 ஏலம் எடுக்கப்பட்டது குஜிலியம்பாறை சேர்ந்த சிவக்குமார்(25) என்பவர் எடுத்தார்

Similar News