ஜீவாமிர்தம் தயாரிப்பு" கத்தியவாடி கிராமம் பிப்ரவரி 7
கலவையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் (அபர்ணா,அபிநயா,அபிநயாஸ்ரீ , அஜித்தா பிரியதர்ஷினி,அகல்யா கா, அகல்யா மு) கிராமப்புற வேலை அனுபவத் திட்டம் (RHWE) இராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் கத்தியவாடி கிராமத்தில் விவசாயிகளுக்கான பயனுள்ள செயல்விளக்க நிகழ்ச்சியை நடத்தியனர்.;
ஜீவாமிர்தம் தயாரிப்பு" கத்தியவாடி கிராமம் பிப்ரவரி 7 கலவையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் (அபர்ணா,அபிநயா,அபிநயாஸ்ரீ , அஜித்தா பிரியதர்ஷினி,அகல்யா கா, அகல்யா மு) கிராமப்புற வேலை அனுபவத் திட்டம் (RHWE) இராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் கத்தியவாடி கிராமத்தில் விவசாயிகளுக்கான பயனுள்ள செயல்விளக்க நிகழ்ச்சியை நடத்தியனர். இந்த நிகழ்ச்சியில்,ஜீவாமிர்தம் பற்றி விளக்கினர். ஜீவாமிர்தம் என்பது மண்ணின் வளத்தை பெருக்கி, பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்டச்சத்துக்களை வழங்கும் ஒரு மிகச்சிறந்த இயற்கை திரவ உரம். நாட்டு பசுஞ்சாணம் (10 கிலோ), கோமியம் (5-10 லிட்டர்), வெல்லம் (2 கிலோ), ஏதேனும் ஒரு பயறு மாவு (2 கிலோ) மற்றும் கைப்பிடி அளவு வளமான மண் ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து, 2-3 நாட்கள் நிழலில் நொதிக்க வைத்தால் ஜீவாமிர்தம் தயார்.