தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் திமுக சார்பில் குதிரை பந்தய போட்டி. பார்வையாளர்கள் பரவசம்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் திமுக சார்பில் குதிரை பந்தய போட்டி. பார்வையாளர்கள் பரவசம்.;

Update: 2026-01-18 13:51 GMT
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் திமுக சார்பில் குதிரை பந்தய போட்டி. பார்வையாளர்கள் பரவசம். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாளை தமிழக முழுவதும் உள்ள திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக ஆங்காங்கே கொண்டாடி வருகின்றனர். இதேபோல் கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர்- வாங்கல் சாலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் குதிரை பந்தய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரிய குதிரை, நடு குதிரை, சிறிய குதிரை என மூன்று விதமான போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குதிரை வீரர்கள் வெற்றி பெறும் முனைப்போடு போட்டியில் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் பங்கேற்ற குதிரைகள் சாலையில் பந்தய இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த குதிரை உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ சிவகாமசுந்தரி உள்ளிட்ட மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு குதிரை பந்தயப் போட்டியை சிறப்பித்தனர்.

Similar News