ராசிபுரத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி 750-க்கும் மேற்பட்ட கராத்தே மாணவ மாணவியர்கள் பங்கேற்பு...
ராசிபுரத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி 750-க்கும் மேற்பட்ட கராத்தே மாணவ மாணவியர்கள் பங்கேற்பு...;
தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே அகாதெமி சார்பில் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் ஞயிற்றுக்கிழமை மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சே்ரந்த 750-க்கும் மேற்பட்ட கராத்தே மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு கட்டா, குமிட்டி, குரூப் கட்டா, டீக் ஸ்பேரிங் உள்ளிட்ட பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக இப்போட்டி ஸ்ரீவித்யாமந்திர் பள்ளிகளின் செயலர் வி.சுந்தரராஜன், பொருளாளர் வி.ராமதாஸ், முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் தமிழ்நாடு சோட்டாகான் அகாதெமியின் தலைவர் டி.கிருஷ்ணன், தலைமை பயிற்சியாளர் வி.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.