ரூபாய் 7.52 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.

ரூபாய் 7.52 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.;

Update: 2026-01-12 11:34 GMT
ரூபாய் 7.52 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி. கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார். இதில் புஞ்சை கடம்பங் குறிச்சி, வாங்கல் குப்பிச்சிபாளையம், மண்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ரூபாய் 7.52 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்தல், கிராம அறிவு சார் மையக் கட்டிடம் அமைத்தல், கழிவு நீர் வடிகால் அமைத்தல், கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் அமைத்தல், மயானத்திற்கான சுற்றுச்சுவர் அமைத்தல், சாலைகளை மேம்படுத்துதல், மினி சமுதாய கூடம் அமைத்தல், குறுகிய சாலையை மேம்படுத்தி இரு வழி தடமாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார். முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் விமல்ராஜ், கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல், மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையர் சுதா, மண்டல குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, வட்டாட்சியர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News